ஆப்கானிஸ்தான்: 8 வயது சிறுவனை தூக்கிலிட்டு கொன்ற தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியை பழி வாங்குவதற்காக, அவரது 8 வயது மகனைக் கடத்திய தீவிரவாதிகள், அந்தச் சிறுவனை தூக்கில் போட்டு கொன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஹெமண்ட் மாகாணத்தில் உள்ள கிரீஸ்க் நகரை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தீவிரவாதிகள் போலீஸ் வாகனத்தைக் கேட்டுள்ளனர்.
ஆனால், அவர் தர மறுக்கவே அவரது 8 வயது மகனை கடத்திச் சென்றனர். பின்னர் அவனை தூக்கிலிட்டு கொன்றனர்.
தீவிரவாதிகளின் இந்த கேவலமான செயலுக்கு அந் நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தீவிரவாதிகளின் இந்தக் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் கொடூரம் எந்த ஒரு மதத்திலும், கலாசாரத்திலும் அனுமதிக்கப்படவில்லை. தீவிரவாதிகள் விரைவில் வேரறுக்கப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications