ஏழை இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை கோரி பாஜக போராட்டம்
நாகர்கோவில்: ஏழை இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க கோரி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போல், ஏழை இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பாஜக இளைஞர் அணி சார்பில் கடந்த 21ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது மக்களிடம் பெற்ற கையெழுத்துகள், அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும்.
அப்படியும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்து இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும்.
இந்திய தமிழ் மீனவர்களை பாதுகாக்க தவறிய, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசை கண்டித்தும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கும் இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை பாதுகாக்க கோரியும், தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் ராமேஸ்வரத்தில் வருகிற ஆகஸ்டு 7ம் தேதி கடல் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அகில இந்திய தலைவர்கள் முரளிதரராவ், சதீஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் 1,000 பேர் கலந்து கொள்கிறார்கள். இதே போல் மாநிலம் முழுவதும் இருந்து கடல்
முற்றுகை போராட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள் என்றார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications