சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ.11,000 கோடி மட்டுமே!

இந்திய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலர் ஊழல், முறைகேடு, வரி ஏய்ப்பு மூலம் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். இந்தக் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாபா ராம்தேவ், அன்னாஹசாரே போன்ற சமூக சேவகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சுவிஸ் நாட்டு வங்கிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது. ஆனால், மத்திய அரசை விட மிக வேகமாக செயல்பட்டுவிட்ட இந்த கறுப்புப் பண முதலைகள், அதை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் ரூ.11,000 கோடி கறுப்பு பணம் மட்டுமே எஞ்சியுள்ளது தெரியவந்துள்ளது. இது உலக அளவில் சுவிஸ் நாட்டில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தில் வெறும் 0.07 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் நேஷனல் வங்கி (நமது ரிசர்வ் பேங்க் மாதிரியான வங்கி இது) வெளியிட்டுள்ள செய்தியில், யு.பி.எஸ். மற்றும் கிரடிட்சூசி உள்ளிட்ட சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் 2.1 பில்லியன் டாலர்களை சேமிப்பு கணக்கில் போட்டு வைத்துள்ளனர்.
இந்திய பத்திரிகைகள் இந்தியர்கள் பல லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதில் துளி கூட உண்மையில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக எங்களது வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்த குரல்கள் கடந்த 3 ஆண்டுகளில் தான் வலுவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக மத்திய அரசு வேகமாக செயல்பட்டிருந்தால், இந்தப் பணத்தை மீட்டிருக்கலாம்.
ஆனால், அது குறித்த விவாதமே 3 ஆண்டுகளையும் தாண்டி நடந்து வரும் நிலையில் கறுப்புப் பண முதலைகள் அதை வேறு இடங்களுக்கும் நிதி அமைப்புகளுக்கும் வேறு முதலீடுகளிலும் மாற்றிவிட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக இந்தப் பணம் ஷெசல்ஸ், சிங்கப்பூர், மொரீசியஸ். மத்திய கிழக்கு நாடுகள், முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் உள்ள வங்கிகளுக்கும் நிதி அமைப்புகளுக்கும் இடம் மாறிவிட்டதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications