ஊழல் புகார்: பாலகொலா திமுக ஊராட்சி மன்றத் தலைவர் முத்து டிஸ்மிஸ் - மாவட்ட கலெக்டர் அதிரடி
ஊட்டி: ஊழல், முறைகேடு செய்த பாலகொலா திமுக ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவை பதவி நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பாலகொலா ஊராட்சி மன்றம். இதன் தலைவராக இருப்பவர் முத்து. இவர் திமுகவைச் சேர்ந்தவராவார்.
இவர் மீது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது, ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை முறைகேடாக வெட்ட அனுமதி அளித்தது, நிதி முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இப்புகார்கள் மீது விசாரணை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், இவை அனைத்தும் உண்மை என்று தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்தார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து பாலகொலா ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications