'இது ஒரு குற்றவாளியின் பேச்சு'-ராசா குறித்து காங்கிரஸ் கருத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதிமன்றத்தில் ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் அதீத முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்.

நீதிமன்றத்தில் ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் அதீத முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.

அதே நேரத்தில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை ராசா மூலமாக திமுக காட்டுகிறது என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்றார்.

ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது-கபில் சிபல்:

இதற்கிடையே பிரதமர், ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது சில தகவல்களை ராசா தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.

நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என ஒரு தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இதுபற்றி கட்காரி, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் சிறந்த வழக்கறிஞருமான அருண் ஜேட்லியிடமோ, அல்லது வேறு வழக்கறிஞரிடமோ ஆலோசனை நடத்தலாம். அதன் பிறகு இதில் அவர் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தும் நிதின் கட்காரி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?.

மக்களவைக் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் பாஜகவுக்கு ஏதாவது பிரச்சனை வேண்டும். முக்கியமான பிரசச்னைகள் ஏதுமில்லாததால் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றார் கபில் சிபல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+