பிரிட்ஜிக்குள் திடீர் பனிலிங்கம்: பொதுமக்கள் வியப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டின் ப்ரிட்ஜில் திடீர் என்று பனிலிங்கம் தோன்றியது. இதனை கண்ட வீட்டு உரிமையாளர் அமர்நாத் பனிலிங்கம் காட்சி தருவதாக நினைத்து அதை தினமும் வழிபட்டு வருகிறார்.
தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியில் உள்ள வடக்குவாணியன்விளையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது மனைவி விஜி. அவர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்.
அவர்களது வீட்டின் பிரிட்ஜில் ப்ரீசர் பாக்சை திறந்து பார்த்தபோது அங்கு லிங்க வடிவில் ஐஸ்கட்டி இருந்துள்ளது. தனது வீட்டில் அமர்நாத் சிவலிங்கமே எழுந்தருளியுள்ளதாக நினைத்த விஜி கடந்த சில நாட்களாக அதற்கு பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பிரிட்ஜில் பனி லிங்கம் தோன்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அதனை வியப்புடன் வந்து பார்த்து செல்வதுடன் தீபாராதனை காட்டி வழிபட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications