உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கும் பணியில் ஈடுபட இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸி.அழைப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பூனேவில் இருக்கும் ஜெயின்ட் மெட்ரோவேவ் ரேடியோ டெலஸ்கோப்பை பயன்படுத்த அடிக்கடி இந்தியா வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சர் கிம் கார் கூறியதாவது,
ஸ்கொயர் கிலோமீட்டர் அரே என்ற உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய விஞ்ஞானிகளை அழைக்கிறோம்.
தற்போதுள்ள டெலஸ்கோப்புகளை விட இது 10 ஆயிரம் மடங்கு அதிக செயல் திறன் கொண்டதாக இருக்கும். இது வின்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இந்த திட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசு 40.2 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே இணைந்துள்ளன. 2.1 பில்லியன் டாலர் செலவாகும் இந்த டெலஸ்கோப்பை உருவாக்கும் பணியில் உலகின் தலைசிறந்த வி்ஞ்ஞானிகள் ஈடுபடுவர் என்றார்.
600 இந்திய மாணவ-மாணவியர் ஆஸ்திரேலியாவில் பி.ஹெச்.டி படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அரசு இது தொடர்பாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications