சென்னை 'மார்க்' நிறுவனத்துக்கு ரூ 237 கோடிக்கு ஆர்டர்

கடல் நீரை ஆலைக்குக் கொண்டு வரும் வழியை ஏற்படுத்துவது, நீர் சுழற்சி ஏற்படுத்துவது மற்றும் 250 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலைய கட்டுமானத்தை ஏற்படுத்துவது உள்ளிட்டவை இப்பணியில் அடங்கும்.
காம்பே வளைகுடாப் பகுதியில் கடலுக்கடியில் குழாய்ப் பாதை 5 கி.மீ. தொலைவுக்கு அமைப்பது, நீரேற்று நிலையம், குழாய்ப்பாதை அமைப்பது உள்ளிட்ட பல சிக்கலான பணிகள் இந்த கட்டுமானத்தில் அடங்கும். இப்பணி முழுவதையும் 24 மாதங்களுக்குள் நிறைவேற்றித் தரவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க் நிறுவனத் தலைவர் ஜிஆர்கே ரெட்டி கூறுகையில், "இதுபோன்ற மிகப் பெரும் சிக்கலான பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் மார்க் நிறுவனத்தின் பெயர் மேலும் பிரபலமாகும். அத்துடன் இது மிகவும் பெருமை மிகு பணியாகும். பல்வேறு போட்டிக்கிடையே இந்த ஒப்பந்தம் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இதை மிகச் சிறப்பான வகையில் உரிய காலத்திற்குள் நிறுவனம் நிறைவேற்றும்", என்றார்.












Click it and Unblock the Notifications