வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன்-'அப்ரூவராக' மாறுவாரா இன்ஸ்பெக்டர் லட்சுமணன்?

இரு நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் திங்கள்கிழமை முழுவதும், நேற்றும் விசாரணை நடந்தது. இன்று 3வது நாளாக விசாரணை நடந்தது.
வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் காவலில் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடந்த மூன்று நாட்களாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் அவருக்கு இன்று இரு நபர் ஜாமீன் வழங்கி நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டார்.
ரூ. 25,000க்கு இருநபர் ஜாமீன் வழங்கியதை அடுத்து, வீரபாண்டி ஆறுமுகம் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
ஆதரவாளர்கள் கலாட்டா:
முன்னதாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்ட அவர்கள், கற்களைக் கொண்டு நீதிமன்றத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.
'அப்ரூவராக' மாறுவாரா இன்ஸ்பெக்டர் லட்சுமணன்?:
முன்னதாக விசாரணைக்காக சேலம் நகர காவல் நிலைய வளாக்கத்திலேயே வீரபாண்டி ஆறுமுகம் கடந்த இரண்டு நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அங்கு இரவு பகலாக ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர்.
இதனால் காவல் நிலையமே உள் பக்கமாக பூட்டப்பட்டுவிட்டது. காவல் நிலையம் இருக்கும் பெரிய கடை வீதி, இரண்டாவது அக்ரகாரம், சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, பெரும்பாலான கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.
இந் நிலையில் ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது சேலம் பள்ளபட்டியிலும் பின்னர் கொண்டலாம்பட்டியிலும் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் லட்சுமணன். இவர் மீதும் அங்கம்மாள் நகர் நில மோசடி, பிரீமியர் மில் நில மோசடி உள்பட பல மோசடி வழக்குகள் உள்ளன.
வீரபாண்டி ஆறுமுகத்தை அப்பா என்று கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த இவர் கட்டைப் பஞ்சாயத்துக்கும் பேர் போனவர். தன்னை விட மூத்த அதிகாரிகளையே மிரட்டி, உருட்டி வந்தார். பல உயர் காவல்துறை அதிகாரிகளை இவர் நினைத்த இடத்துக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
திமுக ஆட்சியில் சேலத்தை ஆட்டுவித்து வந்த இவர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கன்னியாகுமரிக்கு மற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்தப் பணியில் சேராமல் விடுப்பில் சேலத்துக்கே வந்துவிட்டார்.
இதையடுத்து நில மோசடி வழக்குகள் காரணமாக இவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். எந்த நேரமும் கைதாகலாம் என்பதால் தலைமறைவாகிவிட்ட இவர், பெங்களூரில் பதுங்கினார். ஆனால், அங்கு வைத்து இவரை சேலம் காவல்துறையினர் நேற்று கைது செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இவரை வைத்து வீரபாண்டி ஆறுமுகத்தை வசமாக மாட்டிவிட திட்டமிட்டுள்ள அதிமுக அரசு, இவரை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அப்ருவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீரபாண்டி ஆறுமுகம் முன்பு உட்கார பயந்த அதிகாரி:
இந் நிலையில் விசாரணை அதிகாரியான உதவி ஆணையாளர் பிச்சை, வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்னால் உட்கார கூட தைரியமில்லாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்துவிட்டு 'உக்காருயா' என்று ஆறுமுகம் கூறிய பிறகு தான் தனது இருக்கையில் உட்காந்தார் என்கிறார்கள் காக்கிகள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications