கோவை ரயில் நிலையத்தில் உலா வந்த போலி டி.டி.ஆர். கைது
கோவை: கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை ஏமாற்றி பணம் வசூலிக்க நின்ற போலி ரயில் டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.
ரயில் நிலையங்களில் டிக்கெட் இல்லாமல் வருபவர்களுக்கு அபாராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளில் டி.டிஆர். எனப்படும் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 8.45 மணிக்கு, கோவை ரயில் நிலையத்தில் நின்ற டிப்-டாப் வாலிபர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதித்து கொண்டிருந்தார்.
அப்போது, ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து வந்த பயணிகளிடம், அந்த வாலிபர், டிக்கெட்டுகளை பரிசோதித்தார்.
இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார், அவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரை மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீசார் ரயில்வே அதிகாரிகளை அழைத்தனர்.
அவர்கள் வந்த போது, அந்த நபர் ஒரு போலி டிடிஆர் என்பது தெரிய வந்தது. அவரை கைது விசாரித்த போது, தர்மபுரி அடுத்த புதுவளவு கிராமத்தை சேர்ந்த திருப்பதி (28) என்பதும், செலவுக்கு பணம் இல்லாததால் டி.டி.ஆர். போல் நடித்ததும் தெரிந்தது. போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications