தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கசாப் அப்பீல்

Subscribe to Oneindia Tamil

Kasab
மும்பை: தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளான் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர்26ம் தேதி புகுந்து பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெரும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். 3 நாள் நீடித்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். கசாப் மட்டும் உயிருடன் சிக்கினான்.

இவன் மீதான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கசாப்புக்கு மரண தண்டனை விதித்தது. இந்த வழக்கு பின்னர் தானாகவே மும்பை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. அங்கு தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி அப்பீல் செய்தான் கசாப். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கசாப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளான் கசாப். மும்பையில் தான் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர் சாலை சிறை அதிகாரிகள் மூலம் அப்பீல் மனுவை தாக்கல் செய்துள்ளான் கசாப்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+