பத்மநாப சுவாமி கோவிலை அரசு ஏற்காது: கேரள முதல்வர் உம்மன் சாண்டி
டெல்லி: பத்மநாப சுவாமி் கோவிலுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்கும். ஆனால் அதை ஏற்று நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள அறைகளில் 5 திறக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொக்கிஷமுள்ள பத்மநாப சுவாமி கோவிலை மாநில அரசு நடத்த வேண்டும் என்று அன்மையில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு வரும் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது,
பத்மநாப சுவாமி கோவில் கேரளாவின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அந்த கோவிலில் இருக்கும் பொக்கிஷங்கள் அனைத்தும் பக்தர்கள் கொடுத்தவை. எனவே, அவை கோவிலுக்குத் தான் சொந்தம்.
மாநில அரசு கோவிலைப் பாதுகாக்கும். ஆனால் அதை ஏற்று நடத்தாது என்றார்.












Click it and Unblock the Notifications