மாணவி பலத்கார வழக்கு-குமரி இன்ஸ்பெக்டர் சக்திவேல் முன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
கொல்லம்: கேரள மாணவி பலத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம், பரவூர் பள்ளி மாணவி விபசாரத்தில் தள்ளப்பட்டு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரால் பலத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் புகார் கூறப்பட்ட குமரி மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தொடர்ந்துதலைமறைவாக உள்ளார். இவர் முன் ஜாமீ்ன்கோரி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை, எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், இந்த வழக்கில் சிக்கியுள்ள மணிகண்டன் முன்விரோதம் காரணமாக என்னை சிக்க வைத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் முழுமையாக ஓத்துழைக்க தயார் என கூறி இருந்தார்.
ஆனால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சக்திவேல் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று இது விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் இன்ஸ்பெக்டர் சக்திவேலை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரது ஜாமீன் மனுவை நீதிபதி சங்கரன் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications