விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முதல்வர்: அமைச்சர் ராமலிங்கம்
ஸ்ரீவைகுண்டம்: விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாக நிறைவேறறுவார் என்று அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்று பாசனத்தில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி வரை உள்ள பாசன பகுதிகளை பொது பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தாமிரபரணி பாசன கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி வரை பார்வையிட்டுள்ளேன். கன்னடியன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி விவசாயத்திற்கு விரைவில் தண்ணீர் வந்து சேரும். அணைக்கட்டில் பழுதாகியுள்ள மதகுகள், ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகள், ஆற்றை தூர்வாருவது மற்றும் விவசாயிகள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு தமிழக முதல்வரிடம் சமர்பிக்கப்படும்.
தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications