திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை-அதிர்ச்சியில் தந்தை சாவு

Subscribe to Oneindia Tamil

கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உடலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சியில் பெண்ணின் தந்தையும் மரணமடைந்தார்.

கிருஷ்ணாபுரம் மீட்டா ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பால்சாமி. இவரது மகள் சுதாலெட்சுமி. இவருக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பால்சாமி செய்து வந்தார்.

இந்நிலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்த போது திடீரென சுதா லெட்சுமி உடலில் தீ வைத்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீடு திரும்பிய பால்சாமி, அவரது மனைவி ஆகியோர் மகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த அதிர்ச்சியில் பால்சாமி சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் மரணமடைந்தார்.

தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் பிடிக்காததால் சுதா லெட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால்தான் இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+