அறிவிக்கப்பட்ட புது ரயில்கள் செப்டம்பருக்குள் இயக்கப்படும்-ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட 1 மற்றும் 2 வது பிளாட்பாரங்கள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் முனியப்பா கூறியதாவது:
சென்னை-பெங்களூர், சென்னை-கோவை, கோவை-எர்ணாகுளம் ஆகிய 3 வழித்தடங்களில் அதிவேக பயணிகள் போக்குவரத்திற்கான தனிப்பட்ட ரயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. அதிவேக ரயில் பாதையில், மணிக்கு 100 முதல் 150 கிமீ., வேகத்தில் ரயில்கள் பயணிக்கும்.
இதேபோல, கொல்கத்தா-சென்னை, சென்னை-மும்பை, புதுடெல்லி-சென்னை, சென்னை-கோவை உள்ளிட்ட 4 வழித்தடங்களில் சரக்கு போக்குவரத்திற்கென தனி ரயில் பாதைகள் அமைக்கவும் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
புதுடெல்லி-மும்பை, மும்பை-கொல்கத்தா இடையே சரக்கு போக்குவரத்திற்கான தனி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை-அரியலூர் இடையே தனியார் பங்களிப்புடன் ரயில்பாதை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 2010-11ம் நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் 4,789.43 கோடி ரூபாய். இது கடந்தாண்டை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகம்.
கடந்த 2011-12ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தென்னக ரயில்வேயின் 16 புதிய ரயில்களில், 5 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள 11 ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும். தென்னக ரயில்வேயில் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த 2,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை வழித்தடத்தில் சென்னைக்கு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் அகலப் பாதையில் தினமும் இயக்க தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. இதுகுறித்து பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications