ஓசூர் அருகே ஓடும் லாரியில் தீ-ரூ. 75 லட்சம் ஸ்டவ் அடுப்புகள் நாசம்
ஒசூர்: ஒசூரில் ஓடிக் கொண்டிருந்த லாரியில் தீப்பிடித்ததில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்டவ்கள் எரிந்து நாசமானது.
ஒசூர் முதலாவது சிப்காட் தொழில் நகரில், எலக்ட்ரிக் குக்கர்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் அடுப்புகளை ஏற்றிய சரக்கு லாரி ஒன்று, ராயக்கோட்டை சாலையில் சென்றது. அப்போது, சாலையின் குறுக்கே தொங்கிய மின் வயர் மீது உரசியது, இதல் லாரியில் இருந்து அடுப்புகளுடன் தீப்பிடித்துக் கொண்டது.
லாரியின் பின்புறத்தில் இருந்து புகை கிளம்பியதை கண்ட லாரி டிரைவரும், கிளினரும் பார்த்த போது, லாரியில் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இதையடுத்து, லாரியில் இருந்து குதித்து தப்பிய இருவரும், ஒசூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் லாரியில் இருந்த 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 ஆயிரம் எலக்ட்ரிக் அடுப்புகள் எரிந்து நாசமாகி இருந்தது.












Click it and Unblock the Notifications