அணைகள் பாதுகாப்பு சட்டம்: ஜெ.வுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்: வைகோ
திருநெல்வேலி: மத்திய அரசின் புதிய அணை மசோதாவை எதிர்த்து அனைத்து கட்சிகளு்ம் போராட வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுப்பியுள்ள குரலுடன் இணைந்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக தென்மண்டல மாநாடு நடக்க உள்ளது. இது தொடர்பாக நெல்லை புறநகர், மாநகர், விருதுநகர், தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை, நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது,
சென்னை அல்லாத வெளியூரில் முதல் முறையாக நெல்லையில் அண்ணா பிறந்த நாள் விழா நடத்தப்ப்ட்டது. அப்போது திமுகவுக்கு புதிய உந்துதல் கிடைத்தது. அதுபோல் தென்மண்டல மாநாடு மதிமுகவுக்கு உந்துதல் தரும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு வேஷம் போடும் பழக்கம் மதிமுகவுக்கு கிடையாது.
மதிமுக, தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் போராடி வருகிறது. ஆனால் இன்று விடுதலை புலிகளை பற்றி பேசாமல் யாராலும் இருக்க முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. பிரசல்சில் நடந்த 2 நாள் மாநாட்டில் பங்கேற்று இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விரிவாக பேசினேன்.
இலங்கையில் தனி ஈழம் அமைய உலகில் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக இருக்கும் தமிழக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. ஏற்பாடு செய்ய வேண்டும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போன்ற நாடுகள் வாக்கெடுப்பு மூலமே தனி நாடுகளாக உருவாகியுள்ளது. அதுபோல் தனி ஈழம் உருவாதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் மலருவது நிச்சயம். அன்று முதல் இன்று வரை விடுதலை புலிகலை மதிமுக ஆதரித்து வருகிறது. இந்த கூட்டம் எதற்கும் அஞ்சாத கூட்டமாகும். இனப்படுகொலை செய்த ராஜபக்சே, மற்றும் அவரது கூட்டாளிகளை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
கருப்பர் இன மக்கள், ஓடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் தங்களது உரிமைக்காக போராடுகின்றனர். அதுபோல் இலங்கை தமிழர்கள் தனி ஈழத்திற்காக போராடுகின்றனர். சுதந்திர தமீழ தேசம் அமைய வெளிப்படையான வாக்கெடுப்பு அவசியமாகும்.
மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பது போன்ற பணிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை கொண்டு வர உள்ளது.
இந்த சட்டம் இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்க கூடியதாகும்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளைபராமரிக்கவும், உடைக்கவும் உரிமை உள்ளது என அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
அத்தகைய சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் டெல்லியில் மத்திய பணியில் உள்ள கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் வஞ்சமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள்.
இதனை எதிர்த்து தமிழக முதல்வர் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த பிரச்னையில் மொத்த தமிழகமும் ஒரு குரலாக எழவேண்டும். இத்தகைய அநீதியான சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் முதல்வரின் குரலுடன் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும் என்றார் அவர்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications