மீன்பிடிக்கச் சென்ற 5 ராமேஸ்வரம் மீனவர்களைக் காணவில்லை-கடத்தியது இலங்கை கடற்படை?
ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டது. இதனால் ராமேஸ்வரத்தில் பதட்டம் நிலவுகிறது.
கடலுக்குப் போய் நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை தமிழக மீனவர்களால். இலங்கை கடற்படைக் காடையர்கள் செய்து வரும் ரவுடித்தனத்தால் நிம்மதியாக போய் மீன்பிடித்து விட்டு, பத்திரமாக திரும்பும் நிலையில் தமிழக மீனவர்கள் குறிப்பாக நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இல்லை.
இந்த நிலையில், ஜூலை 30ம் தேதி 300 படகுகளில் ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று காலை திரும்புவதாக திட்டம். திட்டமிட்டபடி படகுகள் திரும்பி விட்ட நிலையில், பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு மட்டும் வரவில்லை. அதில் குமாரவேல், பரம்பரை, முட்டி, செல்லத்துரை, அரசுப் பாண்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.
இவர்களைத் தேடி ஒரு மீட்புப் படகு கடலுக்குள் சென்றது. இருப்பினும் மாயமானவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்களை இலங்கைப் படையினர் கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில், ஐந்து பேரும் தலைமன்னாரில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் வீரனுக்குத் தகவல் வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஐந்து தமிழக மீனவர்களையும் மீட்கும் முயற்சிகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications