ஜெயலலிதா குறித்து அவதூறுப் பேச்சு-மாஜி திமுக அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது வழக்கு
நாகர்கோவில்: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்திப்பில் திமுக கூட்டம் நடந்தது. சுரேஷ் ராஜன், எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சுரேஷ் ராஜன் முன்கூட்டியே பேசி விட்டு கிளம்பிப் போய் விட்டார். அடுத்துப் பேசிய வாகை முத்தழகன் என்கிற திமுக பேச்சாளர் முதல்வர் ஜெயலலிதாவையும், சோனியா காந்தியையும் அவதூறாக, அநாகரீகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது. அதிமுகவினர் கல்வீச்சில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அமைதிப்படுத்தி இரு தரப்பையும் கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக போலீஸில் விளவங்கோடு அதிமுக எம்.எல்.ஏ. உதயக்குமார் புகார் கொடுத்தார். அதன் பேரில் சுரேஷ் ராஜன், முத்தழகன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல சோனியாவை அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் தரப்பிலும் புகார் தரப்பட்டது. இரு புகார்களையும் பதிவு செய்த போலீஸார் சுரேஷன் ராஜன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விரைவில் சுரேஷன் ராஜன், வாகை முத்தழகன் உள்ளஇட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications