பத்மநாப சுவாமி கோவில் அருகே கடை தீப்பிடித்ததில் மர்மம்- விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் தீப்பிடித்தது சதி வேலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டத்தில் மர்மம் உள்ளதாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் கிழக்கு வாசல் அருகே கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. வாடகை பிரச்சனை காரணமாக இந்த கடை கடந்த 3 மாதமாக பூட்டப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டதால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
பத்மநாப சுவாமி கோவில் அருகே நடந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என முதலில் போலீசார் தெரிவித்தனர். ஆனால் மின் வாரிய அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் அந்த கடைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தெரிய வந்தது.
மேலும் ஜெனரேட்டர் மூலமே கடைக்கு மின்சாரம் வழங்கப்பட்டதும் கடை மூடப்பட்ட பின் ஜெனரேட்டரும் இயக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் கடையில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் பிரான்சிஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications