ஜன்னல் கம்பிகளுக்கிடையே தலை சிக்கி 4 வயது சிறுமி பலி
மதுரை: ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை சிக்கி 4 வயது சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித் தொழிலாளி. அவருடை மனைவி பஞ்சவர்ணம். அவர்களுடைய மகள் வைத்தீசுவரி (4). அங்கன்வாடிக்குச் சென்று வந்தாள்.
நேற்று காலையில் வழக்கம் போல் வைத்தீசுவரி அங்கன்வாடிக்கு சென்றாள். அங்கு ஜன்னல் அருகே இருந்த ஸ்டூலில் எறி வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீர் என்று தலையை கம்பிகளுக்கு இடையே நுழைத்தாள். ஆனால் திரும்பி தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
தலை சிக்கியதால் வைத்தீசுவரி வலியால் அலறத் தொடங்கினாள். உடனே அங்கிருந்த அங்கன்வாடி ஊழியர் சுந்தரம்மாள் சிறுமியின் தலையை கம்பிகளில் இருந்து வெளியே எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. இதையடுத்து மற்றொரு பெண்ணின் துணையோடு மெதுவாக சிறுமியின் தலையை வெளியே எடுத்தார்.
ஆனால் சிறுமிக்கு மூச்சி திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயந்த அவர்கள் சிறுமியை சோழவந்தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications