இலங்கை கரையில் ஒதுங்கிய இந்திய மீனவர் உடல்- இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டாரா?

Subscribe to Oneindia Tamil

மன்னார்: இலங்கையின் மன்னார் கடற்கரைப் பகுதியில் இந்திய மீனவர் ஒருவரின் உடல் ஒதுங்கியது. அவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மன்னார் கடற்கரைப் பகுதியில் ஒரு ஆணின் உடல் கரையொதுங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் கடற்படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து கடற்படையினர் மன்னார் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டனர்.

அந்த உடல் மிகவும் அழுகிய நிலையில் உள்ளது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் அழுகியிருந்தது. அந்த நபர் அணிந்திருந்த சட்டைப் பாக்கெட்டைப் பரிசோதித்தபோது அதில் இந்திய நாணயமும், இந்தியாவைச் சேர்ந்த தீப்பெட்டியும் இருந்தது தெரிய வந்தது. எனவே அவர் இந்திய மீனவராக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

அந்த மீனவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றிருக்கலாம் அல்லது கடலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து மன்னார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+