ரம்ஜான் மாதம் பிறந்ததை அறியாததால் நோன்பு இருக்க மறந்த கசாப்

மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் கசாப். நேற்று மும்பையில் ரம்ஜான் மாதப் பிறப்பையொட்டி நோன்பு தொடங்கியது. இஸ்லாமிய முறைப்படி பருவ வயதை எட்டிய ஆணும், பெண்ணும் நோன்பு இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் கசாப்புக்கு நேற்று ரம்ஜான் மாதம் பிறந்தது தெரியவில்லை. அவன் அடைக்கப்பட்டுள்ள அறையில் காலண்டர் ஏதும் இல்லாததாலும், ரம்ஜான் மாதம் பிறந்தது குறித்து அவனுக்குத் தெரிவிக்கப்படாத காரணத்தாலும், கசாப் ரம்ஜான் நோன்பை மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் ரமேஷ் தமானே கூறுகையில், கசாப்புக்கு நேற்று முதல் ரம்ஜான் மாதம் பிறந்தது தெரியவில்லை.எனவே அவன் நோன்பு இருக்கவில்லை. மாறாக நேற்று அவன் உணவு சாப்பிட்டான் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் ரம்ஜான் மாதம் பிறந்தது குறித்து அவனுக்குத் தெரிவிக்கப்படும் என்றும், நோன்பு இருப்பதும், இருக்காமல் இருப்பதும் அவனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications