சர்தாரி இருக்கும் வரை பிழைப்பில்லை: வேறு வேலை தேடும் பாக். தூக்கிலிடும் ஊழியர்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சபீர் மாசிஹ் (27). இவர் ஒரு கிறிஸ்தவர். அவர் லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் தூக்கு தண்டனைக் கைதிகளைத் தூக்கில் இடுபவர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணியில் தான் இருக்கிறார். முதல் 3 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்டுள்ளார். அவரது மூதாதையர்களும் இதே பணியைத் தான் செய்துள்ளனர்.
ஆசிப் அலி சர்தாரி தூக்கு தண்டனையை விரும்பாததால் கடந்த 2 ஆண்டுகளாக யாரும் தூக்கிலிடப்படவில்லை.
இது குறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
நான் வேறு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆசிப் அலி சர்தாரி அதிபராக இருக்கும் வரையில் யாரையும் தூக்கிலிட அனுமிதக்கமாட்டார். எனது பாட்டனாரின் சகோதரர் தாரா மாசிஹ். அவர் தான் ஜுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டவர்.
கடந்த 2 ஆண்டுகளாக தற்போது யாரையுமே தூக்கிலிடாததால் நான் பெயருக்கு தான் வேலைக்கு சென்று வருகிறேன்.
நான் முதன்முதலாக ஒருவரை தூக்கிலிடும்போது பயந்தேன். ஆனால் சிறை கண்காணிப்பாளர் எனக்கு தைரியமளித்தார். கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது நியாயம் தான்.
நான் பைபிள் கூறுவதை நம்புபவன். குர்ஆனைப் போன்று பைபிளிலும் பழிக்கு பழி என்று உள்ளது. எனவே, கொலை செய்தவர்கள் வாழத் தகுதியில்லாதவர்கள்.
எனக்கு மாத ஊதியம் ரூ. 10 ஆயிரம். ஒருவரை தூக்கிலிட்டால் ரூ. 20 கிடைக்கும்.
தூக்கு மேடைக்கு வருபவர்களில் சிலர் அழுவார்கள், சிலர் பிரார்த்தனை செய்வார்கள். ஆனால் 2 சகோதரர்கள் மட்டும் பாடிக் கொண்டே வந்தனர். இறந்தவரின் குடும்பத்தாரிடம் அவர்களை மன்னிப்புக் கேட்குமாறு கூறியதற்கு பாடினார்கள். நாங்கள் தவறு செய்தோம். சரியாகத் தான் தண்டனை விதித்துள்ளனர் என்றார்கள்.
சிலர் நான் கிறிஸ்தவன் என்பதால் என்னை மாற்றிவி்ட்டு ஒரு முஸ்லீமை பணியமர்த்துமாறு கூறினார்கள். பர்வேஸ் முஷாரப் பதவிக்காலத்தில் ஏராளமானோர் தூக்கிலிடப்பட்டனர்.
பைசலாபாத்தில் உள்ள மாவட்ட சிறையில் நான் ஒரே நாளில் 5 பேரைத் தூக்கிலிட்டேன் என்றார்.
பாகிஸ்தானில் 27 குற்றங்களுக்கு தண்டனை தூக்கு தான்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications