கடலூர், விழுப்புரத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கடலூர், விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் பணிபுரிந்த 21 இன்ஸ்பெக்டர்கள் திடீர் என்று மாற்றப்பட்டுள்ளனர்.

கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணி புரிந்து வந்த 21 இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வினித்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் இடமாற்ற விவரம் வருமாறு,

செஞ்சி ஆய்வாளர் சிங்காரவேலு சத்தியமங்கலத்துக்கும், உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் இளங்கோவன் மரக்காணத்துக்கும், ரோஷணை அரவிந்தன் கடலூர் மாவட்டம் புவனகிரிக்கும், மரக்காணம் சேகர் வடலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

வளவனூர் ஆய்வாளர் சந்திரபாபு சேத்தியாதோப்புக்கும், விக்கிரவாண்டி ஸ்ரீதரன் வேப்பூருக்கும், வானூர் கண்ணதாசன் ஊ. மங்கலத்துக்கும், வளத்தி மணவாளன் பென்னாடத்துக்கும், விழுப்புரம் நகரம் ஷியாம் சுந்தர் கடலூர் திருப்பாப்புலியூருக்கும், தியாகதுருகம் ரவிக்குமார் ராம நத்தத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் ஆய்வாளர் முரளி வானூருக்கும், பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணன் ரோஷணைக்கும், நெய்வேலி ராமநாதன் செஞ்சிக்கும், ராமநத்தம் பிரதீப்குமார் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், திருப்பாப்புலியூரில் சுந்தரவடிவேல் நெய்வேலி தெர்மலுக்கும், அண்ணாமலை நகர் சுப்பிரமணியன் பரங்கிப்பேட்டைக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி திருக்கோவிலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்த சங்கர் கஞ்சனூருக்கும், ராஜேந்திரன் உளுந்தூர்பேட்டைக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த சுகுமாறன் வளவனூருக்கும், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு சந்திரசேகரன் குமராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+