திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் ஓட ஓட விரட்டிப் படுகொலை
கோவை: திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கோவையில் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கோவையில் சமீபத்தில்தான் ஒரு இளைஞரை ஒரு குடிகாரக் கும்பல் நடு ரோட்டில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்தது. இந்த சம்பவத்தின் பாதிப்பே இன்னும் மறையாத நிலையில் ரியல் எஸ்டேட் அஏதிபர் ஒருவரை ஒரு கும்பல் இன்று காலை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்து கோவை மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இன்று காலை கோவை எஸ்எச் காலனி பகுதியில் ரயி்ல்வே கேட் பகுதியிபல் இவர் வந்தபோது 7 பேர் கொண்ட மர்மக் கும்பல் வழிமறித்தது.
இதைப் பார்த்த சோமசுந்தரம் அவர்களிடமிருந்து தப்ப ஓடினார். ஆனால் அக்கும்பல் விடாமல் விரட்டிச் சென்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது. இதில் சோமசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications