திருவாரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் குண்டர் சட்டத்தில் கைது-வி.கே. குருசாமி மீதும்?

இதற்கான வாரண்ட் இன்று பிறப்பிக்கப்பட்டது. அதை காவல்துறையினர் பாளையங்கோட்டை சிறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காளிப்பாளர் ச.முனியநாதன் உத்தரவின் பேரில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் ரமேஷ் என்பவரது கடையை அடித்து நொறுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பூண்டி கலைவாணன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மதுரை திமுக மாநகராட்சி தலைவர் வி.கே. குருசாமி மீதும் குண்டாஸ்?:
அதே போல மதுரை திமுக மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார். தேர்தல் தராறு வழக்கு மற்றும் நில அபகரிப்பு ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை போலீசார், மாவட்ட ஆட்சியர் தலைவர் சகாயத்திற்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சகாயம் அனுமதி அளித்து கையெழுத்து போட்டுவிட்டால் இன்று மாலைக்குள் வி.கே.குருசாமி மீது குண்டாஸ் பாயும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications