உதிரிப் பாகங்கள் இறக்குமதியில் ஹூண்டாய் ரூ.266 கோடி வரிஏய்ப்பு செய்ததாக புகார்

Subscribe to Oneindia Tamil

Hyundai
சென்னை: ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களை கொரியாவில் இருந்து இறக்குமதி செய்தபோது, 266 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ஹூண்டாய் நிறுவனத்துக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை இருங்காட்டுக்கோட்டையில், ஹூண்டாய் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு, கொரியாவில் இருந்து உதவிப் பாகங்கள் இறக்குமதி செய்யும் போது, கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாக, புகார்கள் வந்தது.

இதையடுத்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக விமான நிலையத்திற்கு வந்த ஹூண்டாய் நிறுவனப் பொருட்களை மதிப்பீடு செய்தனர். அதில், மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து, கடந்த 5 ஆண்டுகளில், 266 கோடியே 73 லட்சம் ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளது தெரிந்தது.

டெல்லி அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ஹூண்டாய் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், 5 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்த தொகையை அபராதத்துடன் நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களில் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பெனி விதிகளுக்கு புறம்பான வரி ஏய்ப்பு செய்ததற்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்ற மற்றோரு விளக்க கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்திற்கு அனுப்பபட்டுள்ள நோட்டீஸ்களுக்கான பதிலை பொறுத்து, அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும், என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தலைமை இயக்குனர் ராஜன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+