ஆண்களிடம் இன்டர்நெட்டில் பழகி, பணமோசடி செய்த பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில், இன்டர்நெட்டில் ஆண்களிடம் பழகி ரூ 40 லட்சம் வரை பணமோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஓட்டேரியை அடுத்த ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (25). தந்தை இழந்த இவர் தாய் மற்றும் சகோதரனோடு வசித்து வந்தார். பி.எஸ்.சி., வரை படித்த பிரியதர்ஷினி, இன்டர்நெட்டில் பல ஆண்களோடு பேசி மயக்கும் திறமை படைத்தவர். இவரது பேச்சில் விழுந்த பலரும் தங்கள் பணத்தை இழந்தனர்.

சென்னை கே.கே.,நகரை சேர்ந்த மகேஷிடம், பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்ய உதவுவதாக கூறி, 12 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். யாசர் அராபத் என்பவர் 90 ஆயிரம் ரூபாயும், சாய்நவீன் என்பவரிடம் 1 லட்சம் ரூபாயும், லேப்-டாப்பையும் பறித்துள்ளார்.

பிரியதர்ஷினியிடம் பொருள் மற்றும் பணத்தை இழந்தோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணைக் கமிஷனர் செந்தாமரைக் கண்ணன், துணைக் கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர்.

தன்னுடன் பழகுவோரிடம் பல குரல்களில் பேசிய பிரியதர்ஷி, வெவ்வேறு பெயர்களில் ஒவ்வொரிடமும் அறிமுகமாகி உள்ளார். பல ஆண்களையும் காதல் பேச்சிலும், பணக்கார பெண்களை மணக்க உதவுவதாக கூறியும், மயக்கி பணத்தை கறந்துள்ளார். திருமணமாகாத பிரியதர்ஷினி, குடும்ப வறுமையை போக்கவும், வசதிகளை அதிகப்படுத்தி வாழவே இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பிரியதர்ஷினியை கைது செய்த போலீசார், கோர்ட் உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, தங்க நகைகள், லேப்-டாப், பணம் என 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+