பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டுக் கொன்றது அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவைச் சேர்ந்த டீம் 6 என்ற படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள். அதே அணியினரைத்தான் தற்போது தலிபான்கள் தாக்கி வீழ்த்தியுள்ளனர்.
மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி, மிகத் திறமை வாய்ந்த அணி, மிகவும் புத்திசாலித்தனமான அணி என்று அமெரிக்காவால் புகழப்படும் இந்த டீம் 6 அணியினர் மீது தலிபான்கள் பெரும் தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காவை மட்டுமல்ல அனைவரையுமே அதிர வைத்துள்ளது.
டீம் 6 அணியினர் பயணித்த ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர். 31 அமெரிக்கர்கள் தவிர 7 ஆப்கானிஸ்தான் கமாண்டோக்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் படைகளுக்கு ஆப்கானிஸ்தானில் கிடைத்துள்ள முதல் தனிப்பெரும் உயிரிழப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் யாரும், பின்லேடனைக் கொன்ற படையில் இடம் பெற்றிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிரிவுதான் பின்லேடனைக் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை வாய்ந்த, அதுவும் பின்லேடனைக் கொன்ற சீல் படைக்குப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது, தலிபான்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி மேலும் பெரிய தாக்குதல்களுக்கு அவர்களைத் தூண்டலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
வார்டாக் என்ற ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ராக்கெட் லாஞ்சர் மூலம் ராக்கெட்டை ஏவி அமெரிக்க ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் விழுந்து கிடப்பதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதை அமெரிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அதிபர் ஒபாமாவும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், நமது வீரர்களு்ம், வீராங்கனைகளும் செய்த தியாகங்களின் விரிவாக்கமாக இது அமைந்துள்ளது. இந்த தியாகம் வீண் போகாது. நிச்சயம் தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இரவில் நடந்த இந்த அதிரடி தலிபான் தாக்குதலில் மொத்தம் 39 பேர் கொல்லப்பட்டதாக நேட்டோ படை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications