சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பான ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணம் பாராட்டுக்குரியது-ஜெயந்தி நடராஜன்
சென்னை: தமிழக அரசின் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு தெரிவிக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையை தூய்மையாக ஆக்குவதற்கு ஒரு முயற்சியின் அங்கமாக ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த அணுகுமுறையை வரவேற்கிறேன்.
நான் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சராக இருப்பதால் சுற்றுச்சுழலை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனது அமைச்சகமும் இதற்கு முழு ஆதரவை வழங்கும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் நான் ஆராய்ந்து வருகிறேன். எனது அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருவதில் இதுவும் ஒன்றாகும். நமது உள்நாட்டு விஷயங்களில் எந்த ஒரு திட்டத்திலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதில் எனக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்பும் கிடையாது.
இந்த துறையில் எனக்கு முன்பு இருந்த ஜெயராம் ரமேஷ் சிறப்பாக பணியாற்றினார். அவரது செயல்பாட்டுக்கும் எனது செயல்பாட்டுக்கும் முரண்பாடு இருப்பதாக கூறுவது சரியல்ல. சுற்றுச்சூழலை பொறுத்தவரை இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒற்றுமை உள்ளது. எனவே இதில் பிரச்னை எதுவும் வராது என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications