சீனாவின் கிழக்குக் கடற்கரையை இன்று தாக்குகிறது முய்பா புயல்-2 லட்சம் பேர் வெளியேற்றம்
ஷிஜியங்: முய்பா புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை இன்றுதாக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இந்தாண்டின் 9 புயல் என அறிவிக்கப்பட்டுள்ள முய்பா எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சீனாவின் கிழக்கு மாகாணமான ஷிஜியங்கில் அதிக சேதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீனவர் யாரும் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரை பகுதிகளில், மணிக்கு 162 கி.மீ., வேகத்தில் வரும் புயல் 10-15 கி.மீ வேகத்தில் கரையை நெருங்கி கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் தாக்கத்தில் சீனாவின் மற்ற பகுதிகளில் கன மழையும் பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கத்தை குறைக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஷிஜியங் மாகாணத்தின் கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மேலும் கடற்கரை பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் குயின்ஷான் அணுமின் நிலையம் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 4,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. புயலில் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடி நிவாரண உதவிகள் வழங்க, சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications