சுனாமி குடியிருப்பு கட்டியதில் முறைகேடு-புதுவை கலெக்டர் ராகேஷ்சந்திராவின் பாஸ்போர்ட் முடக்கம்
புதுச்சேரி: சுனாமி குடியிருப்பு கட்டியதில் முறைகேடு குறித்த புகாரில் சிக்கிய புதுச்சேரி மாவட்ட கலெக்டர் ராகேஷ்சந்திரா புதுவை மாநிலத்தை விட்டு வெளியே செல்ல சி.பி.ஐ., போலீசார் தடை விதித்து, அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர்.
சுனாமியின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட போது, புதுவையில் சுனாமி போரலையால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதி மக்களுக்கு குடியிருப்பு கட்ட புதுவை மாநில அரசு முடிவு செய்தது. அந்த குடியிருப்பு கட்டுமானத்தில் பல முறைகேடுகள் நடப்பதிருப்பதாக சி.பி.ஐ., போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இது குறித்த சி.பி.ஐ., விசாரணையின் போது, சுனாமி புனரமைப்பு திட்ட அமலாக்க முகமை திட்ட இயக்குனரும், புதுவை மாவட்ட கலெக்டருமான ராகேஷ்சந்திரா வீட்டிலும், சுனாமி குடியிருப்பு கட்டிய ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் சி.பி.ஐ., போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து, புதுவை கலெக்டர் ராகேஷ்சந்திரா, சுனாமி திட்ட புனரமைப்பு அமலாக்க செயற்பொறியாளர் மோகன் மற்றும் குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்ட ஜதராபாத் தனியார் நிறுவனம் ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதன்பின் கடந்த 5-ம் தேதி மீண்டும் சி.பி.ஜ. போலீசார் புதுவை கலெக்டர் வீட்டில் சோதனை நடத்தி அவரிடம் விசாரி்த்தனர். அப்போது சுனாமி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களையும் சி.பி.ஐ., போலீசார் பார்வையிட்டனர்.
மேலும், சுனாமி புனரமைப்பு திட்ட அமலாக்க முகமை அலுவலகம், சுனாமி நிதி கணக்கு உள்ள வங்கி, கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்துள்ள வங்கி கணக்குகளையும் சி.பி.ஐ., போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கலெக்டர் ராகேஷ்சந்திரா தொடர்புள்ளதை அடுத்து, அவர் புதுவையில் இருந்து வெளியே செல்ல சி.பி.ஐ., போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications