சிரியா போராட்டம்: தூதரை திரும்பப் பெற்ற செளதி அரேபியா
டமாஸ்கஸ்: சிரியாவில் ராணுவம் 50-க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றதையடுத்து செளதி அரேபியா தனது தூதரைத் திரும்பப் பெற்றுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆஷாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்நாட்டு ராணுவம் போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறது. ராணுவம் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் உயிர் இழந்து வருகின்றனர்.
இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, சிரியாவுக்கான தூதரை செளதி அரேபியா திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து செளதி மன்னர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
செளதி அரேபியா தனது தூதரை திரும்பப் பெறுகிறது. சிரியாவில் மக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். சிரியாவில் நடப்பவற்றை செளதி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அங்கு சமாதானம் செய்யப்பட்டு, சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிரியாவுக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று தானாக முன்வந்து சமாதானம் செய்வது இல்லையென்றால் அழிவது. இரண்டாவது வழி ஏற்படாமல் இருக்க ஆண்டவன் அருள்புரிவானாக.
அங்கு நடக்கும் போராட்டம் இஸ்லாமிய போதனைகளை மீறுவதாகும். ஏராளமானவர்கள் இறந்துள்ளனர், பலர் ரத்தம் சிந்தியுள்ளனர், அடைந்துள்ளனர். இது மத போதனைகளுக்கு நேர்மாறானதாகும் என்றார்.
சிரியாவில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் விசித்திரமானது, வியக்கத்தக்கது என்று டமாஸ்கஸிற்கான அமெரிக்க தூதர் ராபர்ட் போர்ட் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications