இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா

எஸ்.எம்.கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே எதையாவது ஒரு குழப்பம் செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். டெல்லியில் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தபடி தினசரி அலுவலகம் வந்து முதலில் சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் ஐ.நா. சபையில் பேசும்போது மெக்ஸிகோ நாட்டு அமைச்சரின் உரையைப் படித்து சொதப்பினார். சமீபத்தில் விம்பிள்டனுக்குப் போய் டென்னிஸ் பார்த்து விட்டு வந்து சர்ச்சையில் .சிக்கினார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். ராஜ்யசபாவில் கேள்விநேரத்தின்போது ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த திவாரி பேசுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் முகம்மது கலீல் சிஷ்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடக் கூடிய அளவில் சிறையில் வாடி வருகிறார். அவரை விடுவிப்பது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
உறுப்பினர் குறிப்பிட்ட சிஷ்டி, இந்தியாவி்ன் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூம் சமீ்பத்தில் தெரிவித்திருந்தார். அது குறித்துத்தான் இன்று உறுப்பினர் திவாரி கேட்டார்.
அதற்குப் பதிலளிக்க எழுந்த கிருஷ்ணா, குறிப்பிட்ட அந்த நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட சலனமில்லாமல் பேசினார்.
இதைக் கேட்டதும் உறுப்பினர்கள் பெரும் குழப்பமு்ம், அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால அதைக் கூட கவனிக்காத, சுதாரிக்காத கிருஷ்ணா தொடர்ந்து பேசுகையில், 80 வயதாகி விட்ட சிஷ்டி வீல்சேரில்தான் நடமாடி வருகிறார். அவரை விடுவிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதுகுறித்து தூதரக அளவில் பாகிஸ்தானுடன் பேசுவோம் என்று பேசிக் கொண்டே போனார்.
இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, எந்த கைதி குறித்து கிருஷ்ணா பேசிக் கொண்டிருக்கிறார் என்று வினவினர். சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத் எழுந்து, உறுப்பினரின் கேள்வியை அமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கம் அளிக்கிறார் என்றுசுட்டிக் காட்டினார். பல்வேறு உறுப்பினர்களும் எழுந்து கிருஷ்ணா உளறிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து எழுந்த பிரதமர் மன்மோகன் சிங், டாக்டர் சிஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததும் உள்துறை அமைச்சரிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றேன். அவர் ராஜஸ்தான் அரசுடன் பேசி வருகிறார். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறேன் என்று விளக்கினார்.
அதன் பிறகுதான் தான் என்ன பேசினோம் என்பதை உணர்ந்தார் கிருஷ்ணா. இருப்பினும் தான் தவறாகப் பேசியது குறித்து உறுப்பினர்களிடம் அவர் விளக்கவில்லை. மாறாக வழக்கமான புன்னகையுடன் அமர்ந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications