பேச்சுவார்த்தை தோல்வி: 18ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்

சேலத்தில் கடந்த மாதம் நடந்த தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில், டீசல் விலை உயர்வு, நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண உயர்வு, உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறி உள்ளது.
மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து, வரும் 18ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம், ஆந்திரா, கேரளா, மகராஷ்டிரா, பாண்டிச்சேரி, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர நேற்று நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மத்திய தரைவழிப்போக்குவரத்து துறை செயலாளர் உபாத்யா முன்னிலையில் வகித்தார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை செயலாளர் எந்த வாக்குறுதியும் தரவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில், பேச்சுவார்த்தையின் போது, மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை செயலாளர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த வாக்குறுதியும் அளிக்கவி்ல்லை.
இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முன்னர் அறிவித்தப்படி வரும் 18ம் தேதி முதல் தமிழகம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, கர்நாடகா என 6 மாநிலங்களிலும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் நடைபெறும். இதில் 6 மாநிலங்களை சேர்ந்த 26 லட்சம் லாரிகள் பங்கேற்கும். இதிலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நாடு முழுவதும் ஒருகிணைந்த ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்.
இவ்வாறு நல்லதம்பி கூறினார்.












Click it and Unblock the Notifications