தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது: அமைச்சர் விஸ்வநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுவிலக்கை தமிழகத்தில் மட்டும் தனியாக அமல்படுத்துவதற்கு சாத்தியமில்லை என அமைச்சர் நத்தம் விஸ்வாதன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தின் போது, பா.ம.க., உறுப்பினர் கலையரசன், பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழகத்தில் இருந்த கள்ள சாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கள்ள சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால், தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச் சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும்.

தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூர்ண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+