ஈரான் கச்சா எண்ணெய் வழங்க எந்த தடையும் விதிக்கவில்லை - பிரணாப் முகர்ஜி

Subscribe to Oneindia Tamil

Pranab Mukherjee
டெல்லி: ஈரான் அரசு கச்சா எண்ணெய் வழங்குவதை நிறுத்தப் போவதாக, இந்தியாவிற்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "உலகில் அதிக கடனுள்ள வளரும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு கணக்குப்படி கடனுள்ள 20 நாடுகளில், இந்தியா 5வது இடத்தில் உள்ளது. சீனா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முன் உள்ளன. இந்தியாவின் கடன் தீர்க்கக் கூடியதே.

ஈரானில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறுக்குமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவின் 20 சதவீத தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இறுக்குமதி செய்வதில் கொடுக்கல்-வாங்கலில் இருந்த சில பிரச்சனைகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை, ஈரான் நிறுத்தப் போவதாக அறிவிப்பு வந்ததாக செய்திகள் வெளியாகின. ஈரானிடமிருந்து அது போன்ற எந்த எச்சரிக்கையும் இந்தியாவிற்கு வரவில்லை. மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்," என்றார்.

ஈரானிடமிருந்து மாதந்தோறும் 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஈரான் தடை விதித்ததாக சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. இதையடுத்து நிதியமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+