சோனியா மீது சட்டசபையில் விமர்சனம்! - தங்கபாலு கண்டனம்
சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் பற்றி சம்பந்தம் இல்லாமல் விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது, என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே வி தங்கபாலு கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.வி.தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "தமிழக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் பற்றி சம்பந்தம் இல்லாமல் விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ரங்கராஜன் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பாராட்டுக்குரியது.
காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்காக பாடுபட்டு எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும், விமர்சனங்களையும் தாங்கிய கட்சி. தற்போது இந்தியாவின் முதன்மையான கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இதை விமர்சனம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் நடந்து வரும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் சட்ட விதிமுறைப்படி மத்திய அரசு நிதியை வழங்கி வருகிறது.
தமிழக முதல்வர் சமீபத்தில் டெல்லி சென்ற போது மத்திய திட்டக்குழு எதிர்பார்த்ததை விட தமிழக அரசுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அதிக அளவில் ஒதுக்கியது. முதல்வர் அளித்த பேட்டியில் கூட நிதி ஒதுக்கீடு பற்றி திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்து இருந்தார்.
தற்போது தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை என்று அவர் கூறுவது சரியல்ல. தேவைகளை மத்திய அரசிடம் முறைப்படி எடுத்து வைத்தால் நிச்சயம் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். தேவையானவற்றை பெற தமிழ்நாடு காங்கிரசும் உறுதுணையாக இருக்கும்.
ராஜீவ் கொலையாளிகள் மனு நிராகரிப்பு வரவேற்புக்குரியது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பதை வரவேற்கிறோம். ராஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை தப்ப விடக்கூடாது. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. ராஜபக்சே தம்பி கோதபய ராஜபக்சேயை கண்டிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறேன்.
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று நானும் வற்புறுத்தி இருக்கிறேன்.
இலங்கையில் சீனா நாட்டின் ஆதிக்கம் உள்ளது. அதன்மூலம் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இலங்கையுடன் மத்திய அரசு நட்பு ரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. என்றாலும் இலங்கை தமிழரின் நலனில் இந்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது," என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications