ஓ.பி.க்கு நாங்கள் பயப்படவில்லை, சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்போம்: ஸ்டாலின்

இதுதொடர்பாக அவர் சபாநாயகர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை, திமுகர எம்.எல்.ஏக்கள், டி.ஆர்.பி. ராஜா (இவர் டி.ஆர்.பாலுவின் மகன்). கோவி.செழியன் ஆகியோர் சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் கொடுத்தனர். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் சார்பில் 8.6.2011 அன்று தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
அதில் சட்டப் பேரவை திமுக தலைவர் அமர்ந்திருக்கும் இடத்துக்குப் பின் பகுதியில் ஒரே வரிசையில் திமுக உறுப்பினர்கள் அமர்ந்து செயலாற்ற ஆவன செய்தால்தான் எங்களால் தொடர்ந்து பணியாற்ற இயலும் என்றும் அதனை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.
இந்த வேண்டுகோள் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் முடியும் வரையில் ஏற்கப்படாததால் விவாதத்தில் கலந்துகொண்டு தொகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
எதிர்க்கட்சிகளின் சார்பில் வைக்கப்படும் இதுபோன்ற சாதாரண கோரிக்கைகளைக்கூட தாங்கள் புறக்கணிப்பதைப் பார்க்கும்போது, அவை விவாதத்தில் எங்கள் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துத் தெரிவிக்காமல் இருப்பதையே ஆளுங்கட்சிக்கு உதவிடக் கூடிய செயல் என்று தாங்கள் கருதுகிறீர்களோ என்ற எண்ணம் ஏற்படுமென்பதால் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இந்தக் கடிதம் எழுதுகிறேன்.
மக்களவையிலும், மற்ற மாநிலங்களின் மன்றங்களிலும் பேரவை உறுப்பினர்கள் கட்சிகளின் அடிப்படையில் ஒரே பகுதியில்தான் அமர்கின்றனர் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.
நாங்கள் அவைக்கு வராதது குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவையில் பேசும்போது, சிறுபிள்ளைத்தனமான கோரிக்கை என்றும், ஏதோ அச்சப்பட்டுக் கொண்டு அவைக்கு வராமல் இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.
பேரவைத் தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை தாங்கள் ஏற்பீர்கள் என்று நம்பிக் காத்திருந்தோமே தவிர, பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு அச்சப்பட்டுக்கொண்டல்ல.
இதற்குப் பின்னரும் ஒரே இடத்தில் அமரச் செய்வதற்கு அனுமதி தரவில்லை என்றால் அதையும் பொது மக்களிடம் தெரிவித்துவிட்டு, எங்கள் ஜனநாயகக் கடமையைத் தொடர்ந்து ஆற்றாமல் இருப்பது மக்களுக்கு அளிக்க வேண்டிய கடமையிலிருந்து தவறுவதாகும் என்ற எண்ணத்தோடு பேரவையில் கலந்துகொண்டு திமுக உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications