காந்தி போதித்த அகிம்சை வழியில் செல்வோம்-தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து

ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
சுதந்திர தினத்தையொட்டி எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை அனைத்து குடிமக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். இந்த மகிழ்ச்சிகரமான நாளில் தேசம் உற்சாக களிப்பில் உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது வாழ்வையே தியாகம் செய்த அனைவருக்கும் நாடு நன்றி கூறுகிறது.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை இத்தருணத்தில் நினைவு கூர்வதுடன், போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய நமது கடமையையும் உணர வேண்டும் தீமைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து களைந்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ஒன்றுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளை களைந்து அரசியல் வேறுபாடு பாராமல் அனைவரும் தேசிய வளர்ச்சிக்கும், ஒருமைபாட்டிற்கும் ஒருங்கிணைந்து உழைக்க உறுதி ஏற்போம்.
இந்திய தேசத்தின் வருங்காலம் மகிழ்ச்சியாகவும், சுபிட்சமாகவும் விளங்க வேண்டி இந்த இனிய சுதந்திர நன்நாளில் பாரத மக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் சேதுராமன்
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக மக்கள் சுதந்திர தாகத்தை சுவாசிப்பது சுகமாக இருக்கிறது. தமிழகத்து சுதந்திர காற்று இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜவாஹிருல்லாஹ்
மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அரசியல் விடுதலையை ஆங்கிலேயரிடமிருந்து வென்றெடுத்த நாம் சமூக, பொருளாதார விடுதலையை முழுமையாக வென்றெடுக்க இந்தியர் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
தங்கபாலு
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ள போதிலும் அப்பதவியில் நீடித்து வரும் தங்கபாலு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் சுதந்திர இந்தியாவின் வெற்றிக்கு அணிவகுத்து தன்னுடைய இன்னுயிரையும், ஏராளமான உடமைகளையும் இழந்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கும், தியாக செம்மல்கள் அனைவருக்கும் இந்நாளில் வீர வணக்கம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications