இந்திய தூதரக அதிகாரி மீதான செக்ஸ் புகார்-பணிப் பெண் வாபஸ்
நியூயார்க்: நியூயார்க் இந்தியத் தூதரகத்தின் மூத்த அதிகாரியான பிரபு தயாள் மீது செக்ஸ் குற்றச்சாட்டு புகார் கூறிய அவரது வீட்டுப் பணிப் பெண் அந்த குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கவுன்சல் ஜெனராலாகப் பணியாற்றும் பிரபு தயாளின் வீட்டில் சந்தோஷ் பரத்வாஜ் (45) என்ற வேலை பார்த்து வந்தார்.
மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு தன்னை தயாள் அடிமை போல நடத்தி நீண்ட நேரம் வேலை வாங்குவதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும் இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், இந்தியாவில் உள்ள எனது கணவரின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டுமானால், தனது கால்களில் மசாஜ் செய்துவிட வேண்டும் என்று தயாள் கூறினார், இது பாலியல்ரீதியான தொந்தரவு தரும் முயற்சியாகவே தெரிகிறது என்றும் தனது புகாரில் பரத்வாஜ் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், இந்தப் புகாரை பிரபு தயாள் திட்டவட்டமாக மறுத்து வந்தார்.
இந் நிலையில் தனது புகாரைத் திருத்திக் கொள்வதாக பரத்வாஜ் நியூயார்க் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பாலியல்ரீதியான தொந்தரவு தந்தார் என்ற புகாரை முழுவதுமாக வாபஸ் பெற்றுள்ளார் பரத்வாஜ்.
மேலும் நான் தூங்குவதற்கு, தயாள் தனது வீட்டின் ஸ்டோர் ரூமில் மிக மிகச் சிறிய இடத்தையே ஒதுக்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டையும் பரத்வாஜ் வாபஸ் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications