அன்னா கைதுக்கு கண்டனம் தெரிவித்து 3 நாள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க சிபிஐ அழைப்பு

Subscribe to Oneindia Tamil

Gurudas Dasgupta
டெல்லி: அன்னா ஹஸாரே கைதுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் 3 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், அன்னா ஹஸாரே கைது ஜனநாயக விரோதமானது. அடிப்படை மனித உரிமையை மீறும் செயல்.

மத்திய அரசின் இந்த எதேச்சதிகரமான நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், 3 நாட்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முன்வர வேண்டும். இதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் கூட இன்று முடிவெடுக்கவுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. அன்னா ஹஸாரே கைது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த வகையான விவாதத்தையும் அனுமதிக்க அரசு மறுக்கிறது என்றார்.

சிபிஐ தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், ஹஸாரே கைது ஜனநாயக உரிமைகளுக்கு விழுந்த கடும் அடியாகும். ஊழலுக்கு எதிரான எந்த இயக்கத்தையும் அனுமதிப்பதில்லை என்ற காங்கிரஸின் அகம்பாவப் போக்கையே இது காட்டுகிறது.

தங்களது அரசு ஊழலில் மூழ்கிப் போயிருப்பதால்தான் இந்த தடைகளை, கடும் நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்று நாடாளுமன்றத்தை முடக்கியது எதிர்க்கட்சிகள் அல்ல. மாறாக காங்கிரஸ்தான் அதற்குக் காரணம். அதை அவர்கள் செய்திருக்கக் கூடாது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+