சசிகலாவின் சகோதரி வனிதா திருச்சியில் காலமானார்
திருச்சி: முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்காள் வனிதா இன்று காலமானார்.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அவர் காலமானார். வனிதாவின் மகன் சுதாகரனைதான் ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதாவின் இன்னொரு மகன் தான் அதிமுக எம்பியாக இருந்த டிடிவி தினகரன் ஆவார். அவரது இன்னொரு மகன் பாஸ்கரன் ஆவார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுதாகரன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதாவை வனிதா சந்திக்கவில்லை என்றும், நீண்ட காலத்துக்குப் பின் சமீபத்தில் தான் அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.
வனிதாவின் மறைவையடுத்து சசிகலா திருச்சி விரைந்தார். அதே போல முதல்வர் ஜெயலலிதாவும் அஞ்சலி செலுத்த வருவார் என்று கூறப்பட்டதால், வனிதாவின் வீட்டில் ஏராளமான அதிமுகவினர் குவிந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications