ஹஸன் அலி ஜாமீன் நிறுத்தம் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொழிலதிபர் ஹஸன் அலியின் ஜாமீனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்த குதிரைப்பண்ணை அதிபர் ஹசன் அலிகான், பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அமலாக்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டப்படி தொடரப்பட்ட வழக்கில், தன்னை ஜாமீனில் விடக்கோரி ஹசன் அலி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஹசன் அலிக்கு ஜாமீன் அளித்தனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹசன் அலிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications