அன்னா ஹஸாரேவை சந்திக்கிறார் பாபா ராம்தேவ்- உண்ணாவிரதத்தில் குதிக்கிறார்
டெல்லி: அன்னா ஹஸாரேவை சிறையில் சந்திக்க பாபா ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். அதேபோல குடியரசுத் தலைவரையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், அன்னாவுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் குதிக்கிறார்.
ஏற்கனவே டெல்லியில் ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தவர். அப்போது போலீஸார் வலுக்கட்டாயமாக ராம்தேவை கைது செய்து டெல்லியை விட்டு வெளியேற்றினர். ராம்லீலா மைதானத்தில் நடந்த அந்தப் போராட்டத்தின்போது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது அன்னா கைது செய்யப்பட்டுள்ளதற்கு ராம்தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தானும் அன்னாவுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இன்று அன்னாவை திஹார் சிறையில் சந்திக்க ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். அதேபோல குடியரசுத் தலைவரையும் நேரில் சந்தித்து மத்திய அரசு மீது புகார் கூறத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் ராம்தேவ் டெல்லிக்குள் நுழைய டெல்லி போலீஸாரும், மத்திய உள்துறையும் அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ராம்தேவும் போராட்டக்களத்திற்குள் நுழைவதால் டெல்லி நிலைமை மேலும் சூடாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications