கிரண் பேடி, சாந்தி பூஷன் திஹாரில் இருந்து விடுதலை
டெல்லி: ஜேபி நரைன் பூங்காவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருந்த கிரண் பேடி காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அன்னா ஹஸாரே தலைமையிலான குழு நேற்று டெல்லி ஜேபி நரைன் பூங்காவில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அன்னா, அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் ஆகியோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். எந்த திஹார் சிறையில் டைரக்டர் ஜெனரலாக இருந்தாரோ அதே சிறையில் அடைக்கப்பட்டார் கிரண் பேடி.
அன்னா ஹஸாரே கைது செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் சிறையை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே உள்ளார் அன்னா.
கைதானவர்களில் கிரண் பேடி, சாந்தி பூஷன் ஆகியோர் நேற்று மாலை 7 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான் கிரண் பேடியைக் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications