காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ்
காரைக்குடி: காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீது கொடுக்கப்பட்ட நில மோசடி புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காரைக்குடி தாலுகா, நாட்டுச்சேரி அருகேயுள்ள அப்பளை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பன்னீர்செல்வத்திடம் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது,
காரைக்குடி தாலுகா, நாட்டுச்சேரி குரூப்பில் அப்பளை கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள 17 ஏக்கர் புஞ்சை தரிசு நிலங்கள் குடி பாத்திய உரிமையுடன் ஆதி திராவிட மக்களுக்கு கடந்த 31.3.1981ல் வழங்கப்பட்டது.
இந்த நிலங்களை காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமி சட்டத்திற்கு புறம்பாக, அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து கிரயம் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்து தனது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் பட்டா மாறுதல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி ஆதி திராவிட மக்கள் என்னிடம் முறையிட்டதின் பேரில், இது குறித்து கடந்த ஜூலை 17-ம் தேதி அன்று எம்.எல்.ஏ. பழனிச்சாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது குறித்து கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.
எனவே, ஆதி திராவிட மக்களின் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ள எம். எல். ஏ. சித. பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தான் இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறியாமல் புகார் கொடுத்துவிட்டதாகக் கூறி அதை வாபஸ் பெற்றுள்ளார் கருப்பையா. இதனையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications