அன்னாவின் போராட்டத்தை முழு மனதோடு ஆதரிக்கிறேன்- டோணியின் அண்ணன்
ராஞ்சி: ஜன் லோக்பால் மசோதா உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு சக இந்தியர்களுடன் இணைந்து நானும் முழு மனதாக ஆதரவு தருகிறேன் என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் எம்.எஸ்.டோணியின் அண்ணனான நரேந்திர சிங் டோணி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடந்தது. பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் டோணியின் அண்ணன் நரேந்திர டோணியும் பங்கேற்று கோஷமிட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், ஜன் லோக்பால் மசோதா அமலாக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறார். நானும் அதையேதான் விரும்புகிறேன். இந்த விஷயத்தில் அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை நான் வரவேற்கிறேன்.
அன்னா ஹஸாரே கூறிய ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு முழு மனதோடு ஏற்று அமல்படுத்த முன்வர வேண்டும் என்றார் நரேந்திரா.












Click it and Unblock the Notifications